வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (08:50 IST)

நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள், டாஸ்மாக்கை மூடுங்கள்: உதயநிதியிடம் பெண்கள் வாக்குவாதம்..!

கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கலைஞர் கூறினார், ஆனால் நீங்கள் வாக்களிக்கவில்லை என அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது இப்போது நீங்கள் தானே இருக்கிறீர்கள், ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் உதயநிதி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று அவர் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் 500 டாஸ்மாக் கடைகளை மூடி இருக்கிறோம் என்று பேசியபோது அங்கிருந்த பெண்கள் ஏன் மற்ற டாஸ்மாக் கடைகளை மூடவில்லை என கேள்வி எழுப்பினர்
 
2016 ல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூடுவோம் என்று சொன்னோம், ஆனால் நீங்கள் ஓட்டு போடவில்லை என உதயநிதி சொல்ல, இப்போது நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள், உங்களுக்குத்தானே இப்போது ஓட்டு போட்டோம், அதனால் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என்று பெண்கள் பதிலடி கொடுத்தனர்

இதனை அடுத்து சுதாரித்த உதயநிதி மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன, படிப்படியாக இன்னும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சொல்லி சமாளித்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்

அமைச்சர் உதயநிதியை  எதிர்த்து பெண்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva