1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (12:28 IST)

குடிதண்ணீர், டாஸ்மாக் தண்ணீர்.. ரெண்டு பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டுவோம்: செளமியா மகள் பிரச்சாரம்..!

தர்மபுரி மாவட்டத்தில் குடிதண்ணீர், பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் அந்த பிரச்சனையை தீர்ப்பது மட்டுமின்றி டாஸ்மாக் தண்ணீர் பிரச்சனைக்கு முடிவு கட்டுவோம் என்று தர்மபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணியின் மகள் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மனைவி சௌமியா போட்டியிடும் நிலையில் அவரது மகள்களும் முதல் முறையாக பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இரண்டு மகள்களும் வித்தியாசமாக பெண்களிடம் பிரச்சாரம் செய்து வருவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளை பிரச்சாரம் செய்து வரும் அன்புமணி மகள் இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு தண்ணீர் பிரச்சனைகளை தீர்ப்போம்

ஒன்று குடி தண்ணீர் இன்னொன்று டாஸ்மாக் தண்ணீர். குடிதண்ணீர் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம், அதேபோல் டாஸ்மாக் தண்ணீர் யாருக்கும் கிடைக்காத வகையில் டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அவருடைய வித்தியாசமான பிரச்சாரம் பெண்களை கவர்ந்து உள்ளதாகவும் சௌமியா அன்புமணி ராமதாஸ் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran