1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (10:19 IST)

தினசரி டாஸ்மாக் வருமானம் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்படுகிறதா? அதிமுக பகீர் புகார்..!

தினந்தோறும் டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் தேர்தல் செலவுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிமுகவின் இன்ப துரை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் என்னதான் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தாலும் அரசியல் கட்சிகள் பணத்தை தண்ணீராக செலவழித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அதிமுகவின் இன்பதுரை நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது டாஸ்மாக் மூலம் கிடைக்கும் தினசரி வசூல் கருவூலத்தில் சேர்க்கப்படவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் கருவூலத்தில் சேர்க்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
ஆனால் அந்த தொகை கருவூலத்தில் செலுத்தப்படாமல் தேர்தல் செலவுக்காக ஆட்சியாளர்களால் பயன்படுத்தி வருவதாக தகவல் வந்திருக்கிறது என்றும் அவர் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார் 
 
மேலும் 40 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை அளித்ததாக உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டு அறிவிப்பு குறித்தும் தேர்தல் கமிஷன் இடம் புகார் அளித்துள்ளோம் என்றும் ஆனால் தேர்தல் கமிஷன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் 
 
Edited by Mahendran