ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (08:53 IST)

ஈரோடு மாவட்டத்தில் திடீர் கட்டுப்பாடு: மாலை 5 மணி வரை மட்டுமே கடை!

ஈரோடு மாவட்டத்தில் திடீர் கட்டுப்பாடு: மாலை 5 மணி வரை மட்டுமே கடை!
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில நகரங்களில் திடீர் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஈரோட்டில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கோவை திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் தேனீர் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உணவகங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் இயங்க அனுமதி என்றும் அதன்பிறகு 9 மணி வரை பார்சல் சேவை மற்றும் அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கோவை திருப்பூர் மாவட்ட அடுத்து தற்போது ஈரோடு மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது அம்மாவட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது