1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India increases

கடந்த 24 மணி நேரத்தில் 38,628 கொரோனா - இந்திய நிலவரம்!!

இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,628 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,18,95,385 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 617 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,27,371 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,017 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,55,861 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,12,153 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்தியாவில் இதுவரை 50,10,09,609 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மாஸ்க் கழற்ற சொன்ன பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர்!