1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. netizens says what adhav arjuna said is lie

எல்லாம் பொய்.. இதெல்லாம் தவெக கேட்டது!.. ஆதவ் அர்ஜுனாவை வெளுக்கும் நெட்டிசன்கள்..

adhav arjuna
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. நேற்று சென்னை பெரம்பூரில் பேசிய ஆதவ் அர்ஜுனா அதை உறுதி செய்தார்.கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகம் அதிமுக -  பாஜக கூட்டணியில் இணைய போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தவெக நிர்வாகி சிடி நிர்மல் குமார் மறுத்தார். ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இதை மறுத்தார். நாங்கள் தவெகவுடன் பேசவில்லை என கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் என்.டி.ஏ கூட்டணிக்குள் விஜயை கொண்டுவரவேண்டும் என விரும்பிய பாஜக தலைமை தவெகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தவெகவுக்கு 50 முதல் 60 தொகுதிகள் மற்றும் விஜய்க்கு துணை முதல்வர் கொடுக்க முன் வந்ததாகவும் செய்திகள் வெளியானது..

அதேநேரம், தவெகவும், அதிமுகவும் இதை உறுதி செய்யவில்லை.. இந்நிலையில்தான் நேற்று பெரம்பூரில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘தவெகவுக்கு 90 தொகுதிகள் மற்றும் இரண்டரை வருடம் விஜய் முதல்வராக இருக்கலாம் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.. ஆனால் பதவிக்காக டெல்லிக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்று பேசினார்.

ஆனால், ஆதவ் அர்ஜுனா சொன்னது முழுக்க முழுக்க பொய்.. அதிமுகவோ, பாஜகவோ விஜயிடம் அப்படி சொல்லவே இல்லை.. எங்களுக்கு 90 தொகுதிகள் வேண்டும்.. விஜய்தான் முதல்வர் என தவெகதான் டிமாண்ட் வைத்தது’ என்று பதிவிட்டு வருகிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
ரங்கசாமிக்கு மதியம் வரை கேடு கொடுத்த பாரதிய ஜனதா.. என்ன செய்ய போகிறது என் ஆர் காங்கிரஸ்?