1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna sorry for his talk about rajinikanth

நேக்கா திருப்பிவிட்டாங்க!.. திமுகன்னா சூழ்ச்சிதான்!. ரஜினி விஷயத்தில் விளக்கம் கொடுத்த ஆதவ் அர்ஜுனா..

adhav arjuna
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதாவ் அர்ஜுனா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்பிய போது அவரை மிரட்டி அவரை வரவிடாமல் திமுக தடுத்தது எனக்கு கூறினார். அதில் மிரட்டியது என்கிற வார்த்தையை எடுத்துக் கொண்டு பலரும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார்கள்.. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரைக்கும் ரஜினியை மிகவும் கடுமையாக விமர்சித்த பலரும் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

ஒருபக்கம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் ரஜினி ரசிகர்கள் கூறினார்கள். இந்நிலையில் நேற்று பெரம்பலூரில் நடந்த தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா இதுபற்றி விளக்கம் அளித்தார்.திமுக மிரட்டியது என்றால் நேரில் கூப்பிட்டு மிரட்டுவது அல்ல.. ஒருவருக்கு எதிராக பிரச்சாரம் செய்வது.. அதைத்தான் நான் அப்படி குறிப்பிட்டேன்.. திமுகவுக்கு எதிராக யார் கட்சி துவங்கினாலும் அவர்களுக்கு எதிரான விமர்சனங்களையும் பிரச்சாரங்களையும் திமுக பரப்பும்.. அதுதான் என் கருத்தின் அடிப்படை..

எம்ஜிஆர் கட்சி துவங்கிய போது அவரை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள்.. ஆனாலும் அவர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார்.. அவருக்கு பின் ஜெயலலிதா வந்தபோது அவரையும் பல வழிகளில் மோசமாக விமர்சித்து பார்த்தார்கள்.. ஆனால் அவரும் வெற்றி பெற்றார்.
அடுத்து நமது விஜயகாந்த் சாரை திமுகவினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள்..

அதேபோல் ரஜினிகாந்த் இங்க சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்கிற முடிவில் அரசியலுக்கு வர ஆசைப்பட்டார்.. அப்போது நான் தமிழ் தமிழ்நாட்டில் ஒரு சர்வே எடுத்தேன். அதில் அவருக்கு 18 சதவீத வாக்குகள் இருந்தது.. இது அவருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.. அப்போது உதயநிதி ஸ்டாலின் ரஜினியை மோசமாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எப்படி எல்லாம் பதிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்..

ரஜினி அரசியலுக்கு வருகிறார்.. ஊழலை ஒழிக்க ஒழிக்க போகிறேன் என்று சொன்னதும் அவரை மோசமாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது அவரை புகழ்ந்து எனக்கு கண்டனம் சொல்கிறார். இந்த சூழ்ச்சி எல்லாம் எங்களுக்கு தெரியாதா?.. ரஜினி சார் வெளியிட்ட அறிக்கையை பார்த்தேன்.. அவர் எங்கள் தலைவருக்கு தலைவர்.. நான் சொல்லியிருந்த வார்த்தை அவரை காயப்படுத்தியிருந்தால் வருத்தமும். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்’ .

தூத்துக்குடியில் ஒரு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.. அதைப்பற்றி செய்திகள் ஓடுகின்ற போதுதான் இந்த விஷயத்தை கையிலெடுத்து பேச துவங்கிவிட்டனர். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் திமுக மடை மாற்றுகிறது. சூழ்ச்சியின் மொத்த உருவம் திமுக’ என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
அடுத்த கட்டுரையில்
234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தவெக!.. விஜய் முடிவு சரியா?..