90 தொகுதி.. விஜய்தான் முதலமைச்சர்னு சொன்னாங்க!.. ஆதவ் அர்ஜுனா ஓப்பன்..
நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. கட்சி துவங்கிய போது எங்களுடன் கூட்டணி அமைத்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என விஜய் அறிவித்தும் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை.. காங்கிரஸ் மட்டும் அந்த கட்சியுடன் பேசி வந்தது.. ஆனால் அதுவும் திமுக கூட்டணியில் இணைந்து விட்டது.. இதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் இணைவார் என்கிற செய்தி வெளிவர துவங்கியது..
அதேநேரம் இந்திய கூட்டணியில் விஜய் வருவது எடப்பாடி பழனிச்சாமி விரும்பவில்லை.. ஏனெனில் இந்த கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு அதிகமான தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி உள்ளிட்ட டிமாண்டுகளை தவெக வைக்கும் இதை எடப்பாடி பழனிச்சாமி விருப்பமில்லை என்று செய்திகள் வெளியானது.
ஒருபக்கம் பழனிச்சாமிக்கு விருப்பமில்லை என்றாலும் என்.டி.ஏ கூட்டணியில் விஜயை கொண்டு வரும் முயற்சியில் பாஜக இறங்கியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக டிமாண்ட் வைத்ததால் பாஜகவும் அந்த முயற்சி கைவிட்டதாக நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நேற்று பெரம்பூரில் பேசிய கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நமக்கு 90 தொகுதிகள் மற்றும் நீங்கள் இரண்டரை வருடம், நாங்கள் இரண்டரை வருடம் முதல்வராக இருக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால் நாங்கள் பதவிக்காக டெல்லிக்கு அடி பணிய மாட்டோம். 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்.