ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு செட் ஆகாது!. காங்கிரஸுக்கு ஸ்டாலின் பதிலடி!..
கடந்த பல வருடங்களாகவே காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் தேர்தலை சந்தித்து வருகிறது. அதேநேரம் காங்கிரஸுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரசுக்கு திமுக கொடுப்பதில்லை. ஆனால் தற்போது எங்களுக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்கிற குரல் காங்கிரஸில் எழுந்திருக்கிறது. காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக் தாகூர் எம்பி உள்ளிட்ட பலரும் இந்த கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒருபக்கம் காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு கூட இதுவரை திமுக குழுவை அமைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் தவெகவுடன் கூட்டி அமைக்க வேண்டும் என காங்கிரஸில் ஒரு சிலர் கருதுகிறார்கள். எனவே ராகுல் காந்தி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தெரியவில்லை..
இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அதிருப்தியை கொடுத்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என கூறி சொல்லியிருக்கிறார். மேலும் காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை என ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.. அது உண்மையில்லை.
காங்கிரஸுடனான கூட்டணி தொடரும்.. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸின் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கைக்கு முக ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டது குறிப்பிடத்தக்கது..