1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. india today election survey made stalin happy

திமுகவுக்கு 45 சதவீத வாக்கு!.. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்தியா டுடே கருத்துக்கணிப்பு..

stalin
பொதுவாகவே தேர்தல் நெருங்கி வந்தாலே பல ஊடகங்களும் யார் வெற்றி பெறுவார்கள்? யாருக்கு எவ்வளவு சதவீத வாக்குகள் என கருத்துக்கணிப்பை நடத்துவார்கள். அந்த கருத்துக்கணிப்பு எல்லாமே சரியாக இருக்கும் என சொல்லிவிட முடியாது. சில சமயம் கருத்துக்கணிப்புக்கு எதிராக கூட தேர்தலில் ரிசல்ட் இருக்கும்..

2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என திமுக திட்டமிட்டி பணியாற்றி வருகிறது.  ஒருபக்கம் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த முறையை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று களமிறங்கி வேலை செய்து வருகிறது. ஒருபக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது. விஜய் 18 சதவீத வாக்குகளை வாங்குவார் என பலரும் சொல்லி வருகிறார்கள்..

இந்நிலையில், இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘திமுகவுக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கிறது. 3 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்தாலே பெரும்பான்மையான இடங்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும்.. ஆனால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் உடைய 12 சதவீத வாக்கு வித்தியாசம் இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
வங்கி மோசடிகளை தடுக்க ஏர்டெல் அதிரடி: புதிய 'Fraud Alert' AI அறிமுகம்!