1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Monsoon in Tamil Nadu leaves

விடைப்பெற்றது வடகிழக்குப் பருவமழை !!

மழை
இன்றுடன் வடகிழக்குப் பருவமழை முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை நிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்றுடன் வடகிழக்குப் பருவமழை தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கேரளா ஆந்திரா தெற்கு உள் கர்நாடகா பகுதியில் இருந்து முழுவதுமாக விலகியதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒப்போ ரெனோ5 ப்ரோ: விலை மற்றும் அம்சங்கள் உள்ளே...!!