சசிகலா விடுதலை பயம்.. டெல்லி பறந்த எடப்பாடியார்! – மு.க.ஸ்டாலின் கருத்து!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2021 (12:36 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நலப்பணி திட்டங்களுக்காக மத்திய அரசிடம் நிலுவை தொகையை வழங்க அவர் வலியுறுத்த உள்ளதாக ஒருபுறம் பேசிக்கொள்ளப்படும் நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால் கூட்டணி குறித்தும் பேச வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் முதல்வரின் இந்த பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”சசிக்கலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவே முதல்வர் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்திக்க சென்றுள்ளார்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :