செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (09:03 IST)

நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து மக்களுக்கு சேவையாற்றுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் வாழ்த்து..!

Modi Stalin Meet
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடியும் தனது சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அதாவது மார்ச் ஒன்றாம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சற்று முன் பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் நீண்ட ஆயுளோடு நல்ல உடல்நலத்தோடு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கூட வழக்கமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் தற்போது தமிழக முதல்வருக்கும் அதே போல் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் வந்த போது பிரதமர் மோடி திமுக அரசையும் முதல்வரையும் கடுமையாக விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது அவர் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva