வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (19:13 IST)

''எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!'' -முதல்வர் மு.க.ஸ்டாலின்

Cm stalin
தூத்துக்குடி ஸ்டெர்லைட் - நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக்கோரி  வேதாந்தா  நிறுவனம் தாக்கல் செய்த மனுவை  இன்று  உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு  தள்ளுபடி செய்தது.
 
இம்மனு மீது  நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட விதிமீறல்கள் குறித்து  தமிழ்நாடு அரசு பல விவரங்களுடன் தெளிவான வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தது.
 
எனவே இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம்,   ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மீண்டும் மிஈண்டும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேசமயம், தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஆளுங்கட்சிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தூத்துக்குடி வட்டாரத்தில் வாக்குகளாக மாற வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.

இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
 
''தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
 
நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது!
 
எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!'' என்று தெரிவித்துள்ளார்.