கூட்டணி பேச்சுவார்த்தை- பாஜக குழு அமைப்பு
வரவுள்ள் மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாஜக குழு அமைத்துள்ளது.
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, நாம் தமிழர், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாஜக குழு அமைத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பிப்னர் ஹெச். ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை நிமித்து உத்தரவிட்டுள்ளார்.