வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (19:10 IST)

முதலமைச்சருக்கு தருமபுரி ஆதீனம் நன்றி!

dharmapuri adheenam
''போலி வீடியோ விவகாரத்தில், தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த  காவல்துறைக்கும்,  தமிழ்நாடு முதல்வருக்கும்,  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தருமபுர ஆதினம்  தெரிவித்துள்ளார்.
 
மயிலாடுதுறையில் உள்ள தரும்பருரம் ஆதீனம் 500 ஆண்டுகள் பழமையானது. அந்த ஆதீனத்தின் 27வது சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார்  சுவாமிகள்  இருந்து வருகிறார்.
 
கடந்த சில மாதங்களாக ஆதீனத்தை சிலர் மிரட்டுவதாகவும் பணம் பறிப்பதாகவும் தகவல் வெளியானது.
 
இதுகுறித்து மடாதிபதியின் சகோதரர் விருத்தகரி மயிலாடுத்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆதீனத்தின் ஆபாசப் படங்கள் தங்களிடம் இருப்பதாகக்  9 பேர் மிரட்டுவதாக புகார் அளித்திருந்தார். 
 
இதுதொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அதில்  மிரட்டல் விடுத்த 9 பேர் மீதும்  வழக்குப் பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உள்ளிட்ட 4 பேரை கைது சிறையில் அடைத்தனர். 
 
இந்த நிலையில், ''போலி வீடியோ விவகாரத்தில், தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தருமபுர ஆதினம் நன்றி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
''கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.

இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.
 
எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.. தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆசீர்வாதம்''என்று தெரிவித்துள்ளார்.