ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி.. சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஈபிஎஸ் வெற்றி..!
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஆச்சரியமான பல திருப்பங்களை கண்டுள்ளன. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலேயே மிக அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாரை விட 98,110 வாக்குகள் அதிகமாக பெற்று இபிஎஸ் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளார்.
மற்றொரு புறம், திருப்பத்தூர் தொகுதியில் மிகவும் விறுவிறுப்பான மற்றும் நெருக்கமான போட்டி நிலவியது. அங்கு தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, திமுகவின் மூத்த வேட்பாளர் பெரிய கருப்பனை வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வெற்றியைப் பெற்றுள்ளார்.
தமிழகத் தேர்தல் வரலாற்றில் இது போன்ற ஒரு மிகக்குறைந்த வாக்கு வித்தியாசம் என்பது அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஒரே தேர்தலில் ஒருபுறம் ஒரு லட்சத்தை நெருங்கும் வாக்கு வித்தியாசமும், மறுபுறம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசமும் அமைந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதே நேரத்தில் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையை பெறுகிறார்.
Edited by Siva