வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (11:08 IST)

திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை – போலீஸார் விசாரணை!

திருச்சி மார்க்கெட் பகுதியில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட பாஜக கட்சியில் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் விஜயரகு. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று விளக்கம் அளிக்கும் பணியை தனது குழுவுடன் சமீப காலமாக செய்து வந்திருக்கிறார்.

இன்று காலை வழக்கம் போல காந்தி மார்க்கெட் பகுதிக்கு சென்றவரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் ரீதியான மோதல் காரணமா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வரகனேரியை சேர்ந்த மிட்டாய் பாபு என்பவர்தான் ரகுவை வெட்டினார் என தெரிய வந்துள்ளது. தலைமறைவான மிட்டாய் பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர். தனிப்பட்ட பிரச்சினையால் மிட்டாய் பாபு நிர்வாகி ரகுவை வெட்டியதாக கூறப்படுகிறது.