திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (12:07 IST)

சன்னோட சன்னுக்கே தடையா! – மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்!

மதுரையில் மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி திமுக உட்கட்சி பிரச்சினைகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதுமுதல் அரசியல் ஈடுபாடு இல்லாமல் மதுரையில் வசித்து வருகிறார் அழகிரி. அவரது பிறந்தநாள் ஜனவரி 30ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக அவரது ஆதரவாளர்கள் மதுரையின் பல பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் ”சன்னோட சன்னுக்கே தடையா” “ஆசையில் அபாயகரமானது அதிகார ஆசை” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரின் புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகியுள்ளன.