குடும்ப விவகாரம்.. அரசியல் நெருக்கடி.. ஜனநாயகனை ரிலீஸ் செய்ய முடியவில்லை.. நெருக்கும் சிபிஐ.. அரசியலில் இருந்து ஒதுங்குகிறாரா விஜய்?
நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடக்கத்திலேயே பலத்த சவால்களை சந்தித்து வருகிறது. ஒருபுறம், 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நெருக்கடிகள் எழுந்துள்ளன.
மறுபுறம், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை வளையத்திற்குள் அவர் கொண்டுவரப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அரசியல் ரீதியாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய பலமான கூட்டணிகளுக்கு இடையே, விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' இன்னும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, மனைவி சங்கீதாவுடன் ஏற்பட்டுள்ள விவாகரத்து விவகாரம் போன்ற தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தந்து வருகின்றன. பொதுக்கூட்டங்களை நடத்துவதற்குக் கூட ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் போடப்படுவதால் விஜய் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை தொடர்வாரா அல்லது நிம்மதியான வாழ்வை தேடி அரசியலை விட்டு விலகுவாரா என்ற விவாதம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
Edited by Siva