1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. prasanth rangasamy tweet against vijay trisha issue

பிள்ளைகளின் மனவலியை சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்?: விஜயை கண்டித்த சினிமா பிரபலம்

vijay
சமீபத்தில் நடைபெற்ற ஏஜிஎஸ் வீட்டுத் திருமண விழாவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரும் ஒரே காரில் வந்ததோடு, மணமக்களுடன் ஜோடியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
குறிப்பாக, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விஜய் பொதுவெளியில் இவ்வாறு நடந்துகொண்டது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்துப் பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்:
 
















விவாகரத்து செய்துவிட்டு நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம், அது உங்கள் விருப்பம். ஆனால், உங்களை நம்பி இருக்கும் இரண்டு பிள்ளைகளைப் பற்றி யோசிக்க வேண்டாமா? அவர்களின் மனவலி பற்றிச் சிந்திக்காத நீங்கள், எப்படி மக்களைப் பற்றிச் சிந்திப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இனி இதற்கு முட்டுக் கொடுக்க முடியாது. தலைவன் சரியில்லாத கட்சியால் (தவெக) தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. தொண்டர்களின் நம்பிக்கையை அலட்சியப்படுத்தும் விஜய், நாளை நாட்டு மக்களையும் இப்படித்தான் கையாளுவார். அரசியல் என்பது பொது வாழ்வு; அதற்கு விஜய் தகுதியற்றவர் என்பதை நேற்றைய நிகழ்வு நிரூபித்துவிட்டது," என அவர் பதிவிட்டுள்ளார்