1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin planing to call meeting soon

தவெக பக்கம் தாவும் திமுக முக்கிய நிர்வாகிகள்!.. முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!..

stalin vijay
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சரானார். அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாலும், விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததாலும் எப்படியும் மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பெரிதும் நம்பினார். 
 
ஆனால், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டது. அதிலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைது அந்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து கூட்டணி ஆட்சியை தவெக அமைத்துவிட்டது..
 
இது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க மாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் அதை முதல்வர் விஜய் உடைத்து விட்டார். ஒருபக்கம் திமுகவிலிருந்து பலரும் தவெக பக்கம் நகர்ந்து வருகிறார்கள்.
 
திமுகவில் ஒன்றிய செயலாளர் பதவியில் சுமார் 1000 பேர் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பின் அவர்களின் 113 பேர் தவெகவுக்கு தாவிவிட்டனர். கட்சியின் அடி நாதமாக இருப்பவர்களை விஜய் பக்கம் நகர தொடங்கியிருப்பதால் முக ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இனிமேலும் இதை அனுமதிக்க கூடாது என முடிவெடுத்த ஸ்டாலின் விரைவில் பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டிருக்கிறாராம்.
அடுத்த கட்டுரையில்
பத்திரப்பதிவு துறையில் அதிரடி புரட்சி: இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை!