விஜயை திட்டி வீட்டிலேயே அவமானப்பட்டேன்!.. மொக்கை வாங்கிய போஸ் வெங்கட்!...
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர் போஸ் வெங்கட். திமுகவின் தீவிர ஆதரவாளர். எனவே நடிகர் விஜய் கட்சி துவங்கிய போது அவரை கடுமையாக விமர்சித்தார். விஜய் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற மாட்டார் என்றெல்லாம் தொடர்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்து வந்தார். மேலும், எக்ஸ் தளத்திலும் தொடர்ந்து விஜயின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தார். இதனால், விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.
ஆனால் சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது. விஜய் முதலமைச்சராக மாறிவிட்டார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போஸ் வெங்கட் தேர்தல் ரிசல்ட்டை குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு கனவு மாதிரி இருந்தது. என் மனைவி என் தலையில் தட்டி உங்களுக்கு அறிவில்லை.. என்ன சொன்னீங்க என்று கேட்டுவிட்டு போய்விட்டாள்.
என் பையன் அப்பா உங்களுக்கு அரசியல் அறிவு சுத்தமா இல்ல என சொல்லிவிட்டு போய்விட்டான். என் பொண்ணு விஜயோட தீவிர ரசிகை.. அவ நான் சொன்னல்ல டாடி.. எனக்கு 18 வயசு இருந்தா நானே விஜய்க்குதான் ஓட்டு போட்டு இருப்பேன்னு என சொல்லிட்டு போய்விட்டாள். இவங்களே இந்த ஏறு ஏறுனா மொத்த தமிழ்நாடும் என்ன பண்ண போறாங்கன்னு நினைச்சேன். என்னை வச்சு செஞ்சுட்டாங்க என சொல்லியிருக்கிறார்..
மேலும் விஜய்க்கு இருந்த வரவேற்பு பார்த்து அவர் 20 சதவீத வாக்குகளை வாங்குவார்.. அதேநேரம் திருச்சி, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் அவர் தோற்பார்.. பல தொகுதிகளில் தவெக இரண்டு அல்லது 3வது இடத்திற்கு வரும் நினைத்தேன்.. ஆனால் நினைத்ததற்கு மாறாக எல்லாம் நடந்து விட்டது என்று கூறியிருக்கிறார்.
