சிறப்பு தரிசனத்துக்கு 4 ஆயிரம்!.. அமைச்சர் ரமேஷிடமே ஆட்டய போட்ட அர்ச்சகர்கள்!..
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் தொகுதி தவெக எம்.எல்.ஏ ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்றது முதலே தமிழகத்தில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு சென்று ஆய்வுகளை நடத்தி வருகிறார் ரமேஷ்.
இந்நிலையில்தான், திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவிலில் சிறப்பு தரிசனம் தொடர்பாக பல முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்து கொண்டிருந்ததால் அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை 5 மணியளவில் சாதாரண உடையில் மாஸ்க் அணிந்து அந்த கோவிலுக்கு சென்றார். தனது உதவியாளரை அனுப்பி விரைவாக சிறப்பு தரிசனம் செய்ய என்ன வழி என்று விசாரிக்க சொல்லியிருக்கிறார்.
ரமேஷின் உதவியாளர் ஒரு அர்ச்சகரிடம் சென்று நாங்கள் 4 பேர்.. விரைவாக சாமி தரிசனம் செய்ய வேண்டும் என கேட்க, அவரோ ஒருவருக்கு ஆயிரம் வீதம் 4 பேருக்கு நான்காயிரம் கொடுத்தால் சுலபமாக தரிசனம் செய்ய வைக்கிறோம். அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என அவர் சொல்ல உதவியாளர் Google Pay மூலம் அந்த அர்ச்சகருக்கு பணத்தை செலுத்தியிருக்கிறார்.
இந்த வழியாக வாருங்கள் உங்களை அழைத்து சொல்கிறோம் என ஐயர் சொல்லியிருக்கிறார்.. இந்த தகவலை உதவியாளர் ரமேஷிடம் சொல்ல அவர் அதிர்ச்சியடைந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று நான் வந்தது கூட தெரியாமல் இப்படி இங்கு முறைகேடு நடக்கிறது.. தொடர் புகார்கள் வந்தது.. இது உண்மையாகியிருக்கிறது என சொல்ல அதிகாரிகள் எதுவும் பேசமால் அமைதியாக இருந்துள்ளனர். பல முறைகேடுகள் தெரியவந்ததால் ஊழியர்களிடம் விளக்க கடிதம் கேட்கப்பட்டது.
தற்போது திருச்செந்தூர் கோவில் சொத்து பட்டியல் மற்றும் ஆவணங்களை ரமேஷ் ஆய்வு செய்து வருகிறார். அர்ச்சகர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஊழல் செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
விரைவாக சாமி தரிசனம் செய்ய அறநிலையத்துறை அமைச்சரிடமே அர்ச்சகர்கள் ஆட்டய போட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.