வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinothkumar
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:56 IST)

மகள் வயது பெண்ணிடம் அத்துமீறிய நபர் -12 ஆண்டுகள் சிறை !

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் பகுதியில்  ஒருவர் தனது மகளின் தோழியைக் கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் அருகே பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தவர் நடராஜன். இவருக்கு 15 வயது மகள் ஒருவர் உள்ளார். அவர் அருகில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அவரது தோழி ஒருவர் அடிக்கடி அவரைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். நடராஜன் அவரிடம் கலகலப்பாக பேச அந்த சிறுமியும் சகஜமாக அவரிடம் பழகியுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது அச்சிறுமி நடராஜன் வீட்டுக்கு வந்த போது அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். இதைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என மிரட்ட அதனால் அந்த சிறுமியும் யாரிடமும் நடந்ததை சொல்லவில்லை. இதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட நடராஜன் அவரை மிரட்டி பல முறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவர போலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து நடராஜனைக் கைது செய்த போலிஸார் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடராஜனுக்கு 12 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது.