1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Last Day for Ration Cardholders to Register Fingerprints for eKYC Today

குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள்.. கைரேகை பதிவு செய்ய இன்றே கடைசி நாள்..

ration card
குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு மேற்கொள்ள இன்றே (ஆகஸ்ட் 9) கடைசி நாளாகும். 
 
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
இதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 2023 முதல் இந்த விரல் ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 
 
இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கோள்ள வேண்டும். பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய் டிவியில் பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி... நடுவர்கள் ஓவியா, ஆரி, ராஜூ..