திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (09:49 IST)

12 வயது மாணவனின் வன்முறைச் செயல் – டியுஷன் ஆசிரியருக்கு கத்திக்குத்து !

மும்பையில் 12 வயது மாணவன் ஒருவன் தனது டியூஷன் ஆசிரியையை பல முறைக் குத்தியுள்ள சம்பவம் பீதியைக் கிளப்பியுள்ளது.

மும்பை சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா அஸ்லம் ஹூசாய் என்ற பெண். இவர் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன் மகன் மற்றும் தாயோடு தனியாக வாழ்ந்து வருகிறார். வீட்டு செலவுகளுக்காக அபார்ட்மெண்ட்டில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் திங்கள் கிழமை அவரிடம் டியுஷன் படிக்கும் மாணவன் ஒருவர் அவரைக் கத்தியால் வயிற்றிலும் பின்புறத்திலும் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மாணவனைக் கைது செய்த போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் தன் தாயிடம் டீச்சர் வாங்கிய கடனைக் கொடுக்காமல் ஏமாற்றியதால் குத்தியதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.