அரை கிலோ மீட்டர் நிர்வாணமாக ஓடிய சிறுமி – ராஜஸ்தானில் நடந்த கொடூரம் !

Last Modified சனி, 14 செப்டம்பர் 2019 (10:15 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியைக் கடத்திச் சென்ற 3 பேர் அவரை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி அரைக் கிலோமீட்டர் நிர்வாணமாக ஓடித் தன்னைக் காபாற்றிக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா என்ற கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது இரு தோழிகளோடு கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த வழியில் சாலையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த ராஜு கஹார், கைலாஷ் கஹார் மற்றும் நாராயன் குர்ஜார் ஆகிய 3 பேரும் அவர்களைப் பின் தொடர்ந்து உள்ளனர்.

அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அனைவரும் ஓட தோழிகள்  இருவரும் தப்பிக்கவே அந்த சிறுமியை அவர்கள் பிடித்துள்ளனர். சிறுமியைக் கடத்திச் சென்ற 3 பேரும் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த சிறுமி அரைக் கிலோமீட்டர் தூரம் நிர்வாணமாக ஓடியுள்ளார். அப்போது அந்த வழியில் வந்த ஆண் ஒருவர் தனது ஆடைகளை அவருக்குக் கொடுத்து அவரைக் காப்பாற்றி போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக பேசிய போலிஸார் அந்த மூன்று நபர்களையும் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :