1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. UP BJP MLA Alleges Daughter Married to Serial Conman with 25 Fake Marriages

25 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி நபர்.. அதில் ஒரு பெண் பாஜக எம்.எல்.ஏவின் மகள்...

பாஜக எம்எல்ஏ
உத்தரப் பிரதேச மாநிலம் சேவாடா தொகுதி பாஜக எம்எல்ஏ ஞான திவாரி, தனது மகளுக்கு தன் அடையாளத்தை மறைத்து மோசடி நபருடன் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக்குற்றம் சாட்டியுள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள வீடியோ மற்றும் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அனுஜ் திரிவேதி மற்றும் அவரது மகன் பிரகர் திரிவேதி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
கடந்த 2024ஆம் ஆண்டு எம்எல்ஏவின் மகள் பிரக்யாவுக்கும், பிரகர் திரிவேதிக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது அனுஜ் திரிவேதி தன்னை மும்பையை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் என்று கூறிக்கொண்டு தனது குற்றப்பின்னணியை மறைத்துள்ளார்.
 
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, பிரகர் திரிவேதி போலி அடையாளங்களை பயன்படுத்தி மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல பெண்களை ஏமாற்றி சுமார் 25 முறை திருமணம் செய்து மோசடி செய்துள்ள அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. 
 
இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ தனது மகளை மீட்டு அழைத்து வந்ததோடு, அந்த குடும்பத்துடன் அனைத்து தொடர்புகளையும் துண்டித்து கொண்டார். இந்த மோசடி குறித்து ரெளசா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
Edited by Siva
About Writer
சிவலிங்கம்
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வினாடி வினா போட்டியில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..