திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:36 IST)

14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில் கைதான நபர் !

திருப்பூரில் 14 வயது சிறுமியைக் கட்டிட வேலைக்கு அழைத்து சென்று சீரழித்த நபரைப் போலிஸார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமைந்துள்ள பொட்டிக்காம்பாளையம் வசித்து வருபவர் சுப்ரமணி எனும் கட்டிட தொழிலாளி. இவர் வசிக்கும் பகுதிக்கு அருகே தாய் ஒருவர் தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த தாயுடனும் மகளுடனும் நம்பிக்கைக்கு உரியவராக அவர்களிடம் பழகி வந்துள்ளார் சுப்ரமணி.

இந்நிலையில் அந்த தாயிடம் கட்டிடத் தொழிலுக்கு அவர் மகளை அனுப்பி வைத்தால் தான் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக சொல்லியுள்ளார். அவரை நம்பிய அந்த தாயும் குடும்பத்துக்குக் கொஞ்சம் அதிக வருமானம் வரும் என்ற ஆசையில் தனது மகளைக் கட்டிட வேலைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பயந்து போன அவர் போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியைத் தேடிய போலிஸார் அவரை திருப்பூர் பேருந்து நிலையத்தில் கண்டுபிடித்து விசாரணை நடத்தியதை அடுத்து சுப்ரமணி தன்னைப் பாலியல் வல்லுறவு கொண்டதாக சொல்லியுள்ளார். இதையடுத்து சுப்ரமணியைத் தேடி கண்டுபிடித்து அவரைப் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.