செவ்வாய், 3 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:42 IST)

மொட்டை மாடிக்குக் குழந்தை அழைத்துச் சென்ற தந்தை – நொடி நேரத்தில் நடந்த விபரீதம் !

மொட்டை மாடிக்குக் குழந்தை அழைத்துச் சென்ற தந்தை – நொடி நேரத்தில் நடந்த விபரீதம் !
திருப்பதி மற்றும் அவரது மகள்

சென்னையில் உள்ள மதுரவாயலைச் சேர்ந்த திருப்பதி எனும் நபர் தனது மகளோடு மொட்டை மாடியில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயலைச் சேர்ந்த திருப்பதி என்பவர், குடோன் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வந்தார். அவர் தன் மனைவி சுனிதா இரு குழந்தைகளுடன் மதுரவாயலில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் பாதிகப்பட்டு அதற்காக சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் தன் மகளை மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காதவிதமாக தன் மகளோடு மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து இருவரது தலையிலும் அடிபட்டு ரத்தம் வழிந்தோடியது. இதைப் பார்த்து அதிர்ச்சியான அவரது மனைவி சுனிதா ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்களை சோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாகவும், திருப்பதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சொல்லியுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமம்ந்தமாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.