காதலுக்கு எதிர்ப்பு... காதலர் தினத்தில் தற்கொலைசெய்து கொண்ட காதல் ஜோடி !

loversday
sinoj kiyan| Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (15:44 IST)
காதலுக்கு எதிர்ப்பு காதலர் தினத்தில் தற்கொலைசெய்து கொண்ட காதல் ஜோடி

நேற்று உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் காதலர் தினத்தை கொண்டாடினர்.ஆனால், கர்நாடக மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் என்ற பகுதியில் உள்ள யமகும்பா கிராமத்தில் வசித்து வந்தவர் சிந்து ஸ்ரீ. இவர் கல்லூரியில் படிக்கும்போது,
பட்டேகாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சினை காதலித்து வந்துள்ளார்.


அப்போது, சிந்துஸ்ரீயின் காதலுக்கு அவரது பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததும் தெரியவந்துள்ளது. முக்கியமாக சச்சின் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை சிந்துஸ்ரீயின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் சிந்துஸ்ரீக்கு வரும் 16 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதில் சிந்துக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. அதேசமயம் சச்சினை மறக்க முடியாமல் இருவரும் நேற்று தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இருவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :