வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:37 IST)

அம்மா என்னை எரித்துவிடுங்கள் – பின்னணி பாடகியின் உருக்கமான தற்கொலைக் கடிதம் !

தற்கொலை செய்துகொண்ட சுஷ்மிதா தன் கணவருடன்

கன்னட சினிமாவில் பிரபல பாடகியாக விளங்கிய சுஷ்மிதா ராஜன் என்பவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட சினிமாவில் பின்னணியாக பாடகியாக விளங்கி வருபவர் சுஷ்மிதா ராஜன். இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவரின் கணவரின் குடும்பம் கூட்டுக் குடும்பம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சுஷ்மிதாவின் கணவர் தன் பெரியம்மா மற்றும் சகோதரியின் பேச்சைக் கேட்டு சுஷ்மிதாவிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக மனமுடைந்த சுஷ்மிதா நேற்று தனது அம்மாவின் வீட்டுக்கு சென்று அம்மாவிடமும் சகோதரரிடமும் இதுபற்றி புலம்பியுள்ளார். பின்னர் நேற்றிரவு தூங்க சென்றுள்ளார். காலையில் அவரின் தாயுக்கும் சகோதரருக்கும் செல்போனில் அனுப்பிய தற்கொலைக் கடிதத்தைப் பார்த்த இருவரும் அதிர்ச்சியாகி அவரின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.

சுஷ்மிதா எழுதி இருந்த கடிதத்தில் ‘என் சாவுக்கு என் கணவர் குடும்பம்தான் காரணம். அந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டு இருப்பேன். ஆனால் பிறந்த வீட்டில் இறந்தால்தான் அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கும் என இங்கு வந்தேன். அவர்களை சும்மா விட்டு விடாதீர்கள். நம்ம சொந்த ஊரிலேயே என்னை புதைத்துவிடுங்கள். இல்லை என்றால் எரித்து விடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக சுஷ்மிதாவின் குடும்பத்தார் போலீஸாரிடம் புகார் அளிக்க தலைமறைவாக உள்ள சுஷ்மிதாவின் கணவன் சரத்குமார், பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோரைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.