விமான நிலையத்தில் பேட்டி அளிக்காமல் ‘கேட்’டில் பேட்டி ஏன்? ரஜினியின் அரசியல்

rajini
‘கேட்’டில் பேட்டி ஏன்? ரஜினியின் அரசியல்
Last Modified வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வழக்கமாக படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பும்போது விமான நிலையத்தில் பேட்டி அளிப்பார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முடிவடைந்ததை அடுத்து சென்னை திரும்பினார். அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர் அனைவரும் விமான நிலையத்தில் காத்திருந்தனர்
ஆனால் பத்திரிகையாளர்களை விமான நிலையத்தில் சந்திக்காமல் நேரடியாக வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் வழக்கம்போல் வீட்டில் கேட் முன் பேட்டியளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டின் முன் பேசுபவர்கள் எல்லாம் தலைவர் ஆகி விடுகிறார்கள் என கிண்டல் செய்ததை அடுத்து வேண்டும் என்றே ரஜினிகாந்த் நேற்று விமான நிலையத்தில் பேட்டி அளிக்காமல் கேட்டில் பேட்டி அளித்ததாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
திமுக தலைவர் மு க ஸ்டாலினை வெறுப்பெற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக ரஜினியின் கேட்டில் பேட்டி அளித்துதுள்ளதாகவும், இதனை புரிந்து கொண்டவர்கள் மட்டும் கொண்டாடுங்கள் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக ஸ்டாலின் தரப்பில் இருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :