1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:42 IST)

முதலிரவு அறையில் தூக்கில் தொங்கிய மணமகன்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

முதலிரவு அறையில் தூக்கில் தொங்கிய மணமகன்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அருகே திருமணம் ஆன அன்றே முதலிரவு அறையில் மணமகன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பெலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மற்றும் நந்தினி ஆகியவர்களுக்கு கடந்த 8 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து மணமக்கள் இருவரும் மணமகள் இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர். 8 ஆம் தேதி இரவு மணமகள் இல்லத்தில் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்ப்ட்டுள்ளது.

இந்நிலையில் 9 ஆம் தேதி காலை மணமகள் அந்த அறையில் இருந்து அதிர்ச்சியோடு அலறி அடித்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அறைக்குள் சென்ற போது மணமகன் கார்த்திகேயன் தூக்கில் தொங்கி சடலமாக காணப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து உடலை மீட்டனர். பின்னர் மணமகளிடம் விசாரித்ததில் முதலிரவு அறையில் கார்த்திகேயன் பதற்றமாக இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தி வைத்துவிட்டு தான் தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.