வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 செப்டம்பர் 2021 (22:21 IST)

நெல்லையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்திருந்தாலும் தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாள்தோறும் அரசு தலைமை அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் வசதியையும் தமிழக அரசு அமல்படுத்தியது.
 
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் நாளை 12.09.21 தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. குறிப்பாக நெல்லையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொள்ள உள்ளார்.