வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (08:55 IST)

40 ஆயிரம் முகாம்கள்; 20 லட்சம் தடுப்பூசிகள்! – தமிழகத்தில் பிரம்மாண்ட முகாம் தொடக்கம்!

தமிழகத்தில் இன்று 18 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது 7 மணியளவில் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகை தந்து வருகின்றனர்.