1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:32 IST)

விஜய்யின் சாதி சான்றிதழில் இப்படிதான் உள்ளது… எஸ் ஏ சந்திரசேகர் பகிர்ந்த ரகசியம்!

நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழில் தமிழன் என்றுதான் குறிப்பிட்டேன் என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மூத்த இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகர் சாயம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். சாயம் திரைப்படம் ஒரு மாணவனின் வாழ்க்கையில் சாதிய சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த விழாவில் பேசிய எஸ் ஏ சி ‘என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது சாதி என்ற இடத்தில் தமிழன் என்றுதான் நிரப்பினேன். முதலில் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நான் போராட்டம் நடத்துவேன் என சொன்னபிறகு ஏற்றுக்கொண்டார்கள். இப்போது வரை தமிழன் என்றுதான் உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.