திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (19:02 IST)

பதவி சண்டைதான் தர்ம யுத்தமா? - மு.க.ஸ்டாலின் விளாசல்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தது பற்றி காட்டமான கருத்தை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுகவின் இரண்டாக பிரிந்திருந்த ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணி இன்று ஒன்று சேர்ந்துள்ளது. ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் மற்றும் நிதித்துறை அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டவர்களுக்கும் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இந்ந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் “பதவிக்காக  சண்டை போடுவதுதான் தர்ம யுத்தமா?. பதவி வெறியை மறைக்க தர்ம யுத்தம் என மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. பாஜகவின் காலில் முன்னால் இந்நாள் முதல்வர்கள் விழுந்து கிடக்கின்றானர். பாஜக எழுதிய திரைக்கதையை இவர்கள் அரங்கேற்றியுள்ளனர். துபாயில் பண பேரம் நடந்ததாக அதிமுக எம்.எல்.ஏவே குற்றம் சாட்டியுள்ளார். இது மக்களை ஏமாற்றும் வேலை” என அவர் குற்றம் சாட்டினார்.