சாய் பல்லவியால் பிரியா பவானிசங்கருக்கு கிடைத்த வாய்ப்பு
மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக பிரியா பவானிசங்கர் நடித்ததற்கு, சாய் பல்லவி தான் காரணம் என்கிறார்கள்.
ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘மேயாத மான்’. இந்தப் படத்தில் வைபவ் ஜோடியாக, சினிமாவில் அறிமுகமாகிறார் பிரியா பவானிசங்கர். ‘மது’ என்ற குறும்படமே முழுநீள திரைப்படமாகி இருக்கிறது. இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் சாய் பல்லவியைத்தான் அணுகியிருக்கின்றனர். ஆனால், அவர் மறுத்துவிட்டார். எனவே, மெயிலில் வந்த பிரியாவின் புகைப்படத்தைப் பார்த்து ஆடிஷனுக்கு வரச்சொல்லி இருக்கின்றனர். அப்படி ஆடிஷனில் தேர்வானவர் தான் பிரியா பவானிசங்கர்.