திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (18:01 IST)

தெருச்சண்டையில் உயிரை விட்ட உலக சாம்பியனான பளு தூக்கும் வீரர்(வீடியோ)

பளு தூக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற நபர் ஒருவர் தெரு சண்டையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ்(22) என்பவர் 2008 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் பளு துக்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர். தற்போது சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.
 
அப்போது அவருக்கும் அவரது நண்பர் ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அவரது நண்பர் தாக்கியத்தில் ஆண்ட்ரி உயிரிழந்தார். அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. படத்தில் வரும் சண்டை காட்சி போன்றுள்ளது. ஒரே உதையில் ஆண்ட்ரியை வீழ்த்திவிட்டார் அவரது நண்பர். இந்த சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

நன்றி: Samjey