திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (18:59 IST)

வட கொரியாவின் ரூம் நம்பர் 39: உலகறியா ரகசியங்கள்...

வடகொரியா மீது உலக நாடுகள் பல சர்வதேச தடைகள் மற்றும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 


 
 
இதுபோன்ற தடைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.
 
ஆனால், வடகொரியா இதுவரை தன்நிலையில் இருந்து மாறாமல்தான் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வடகொரியாவின் ரூம் நம்பர் 39 என் கூரப்படுகிறது.
 
வடகொரியாவில் உள்ள பியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் நம்பர் 39 உள்ளது. இங்குதான் கள்ளப்பணம் தயாரிக்கப்படுகிறது.
 
அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வடகொரியாவால் வாழமுடிகிறது.
 
சீன கறுப்பு சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் விற்கப்படுகிறது. இப்படித்தான் வடகொரியாவின் பொருளாதாரம் தடுமாற்றமின்றி நிலையாக உள்ளது.