1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lockdown to be extended in Tamil Nadu

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு??

தமிழகம்
தற்போதைய தகவலின் படி தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு எதிர்வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரி 35 ஆயிரமாக உள்ளது.
 
இதனால் இந்த இரண்டு வார ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு குறித்து நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
அவர்களது ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய தகவலின் படி மிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash