புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (12:45 IST)

வலிமை ஓடிடி ரிலிஸ் பற்றி பதிலளித்த அமேசான் ப்ரைம்!

வலிமை படம் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளது அந்நிறுவனம்.

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது.

இதனால் மறுபடியும் வலிமை ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஓடிடியிலாவது படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர். இதனால் ரசிகர் ஒருவர் அமேசான் நிறுவனத்திடம் வலிமை ஓடிடியில் ரிலீஸாகும் என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த அமேசான் ‘நீங்கள் கேட்டுள்ள தலைப்பு குறித்து அக்கறையை புரிந்துகொள்கிறோம். அது குறித்து நாங்கள் எதுவும் வெளியிடவில்லை. மேலும் அப்டேட்களுக்கு எங்கள் தளத்தை பின் தொடருங்கள்’ எனக் கூறியுள்ளது.