புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (13:11 IST)

பிறந்தநாளன்று டிவிட்டருக்கு வந்த மூத்த நகைச்சுவை நடிகர்!

நடிகர் ஜனகராஜின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவர் சமூகவலைதளப் பக்கமான டிவிட்டரில் இணைந்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவால் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜனகராஜ். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி அமெரிக்காவில் தன் மகனோடு செட்டில் ஆனார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 96 மற்றும் தாதா 87 ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் டிவிட்டரில் தனது புதிய கணக்கை தொடங்கியுள்ளார். திரைநட்சத்திரங்கள் பலரும் அவருக்கு டிவிட்டரில் உற்சாகமான வரவேற்பும் பிறந்தநாள் வாழ்த்துகளும் பகிர்ந்துள்ளனர்.