ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (13:02 IST)

அதிகரிக்கும் கொரோனா; தள்ளிப்போகும் தளபதி 65 ரிலீஸ்!

நடிகர் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனாவால் நிறுத்தப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் “தளபதி 65”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற இருந்தது. அதற்குள் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்ததால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் படப்பிடிப்பை தொடங்க கால தாமதம் ஆகலாம் என்பதால் பட ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. 2022ம் ஆண்டு தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிடலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.