புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (13:04 IST)

கூடுதலாக 900 மெட்ரிக் டக் ஆக்ஸிஜன்… தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு உத்தரவு!

கோப்புப் படம்

தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்க மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு பின்னும் தமிழகத்தில் இன்னும் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இம்மாத இறுதிக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு கூடுதலாக தினசரி 180 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவை என திமுக மத்திய அமைச்சர் டி ஆர் பாலு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து 5 நாட்களுக்கு தேவையான 900 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.