அரசியல் பதவியில் எனக்கு எந்த ஆசையும் இல்லை!.. மனம் திறக்கும் லதா ரஜினிகாந்த்..
அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு பின் நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவர் வரை சென்றார். விஜயகாந்தை போல சிலர் நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் ஒன்னும் சாதிக்க முடியவில்லை. ஆனால், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இரண்டு வருடங்களிலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்று தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
ஒரு பக்கம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி ஒரு புதிய அரசியல் இயக்கத்தை துவங்கியிருக்கிறார். மற்றொரு பக்கம் ரஜினியின் மனைவி லதா மக்கள் மேடை என்கிற ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதுபற்றி விளக்கமளித்து சமீபத்தில் ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்..
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லதா ரஜினிகாந்த் அரசியல் பதவியில் மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை.. அரசியலை விட ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதே என் முக்கிய நோக்கம். முதலில் சமூக ரீதியாக மக்களுக்கு சேவை செய்ய தகுதியானவர்களாக மாற வேண்டும். நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வதே தற்போதைய இலக்கு. அந்த இயக்கத்தின் எதிர்காலத்தை அடுத்த தலைமுறைகளை தீர்மானிக்கட்டும்.. நான் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் எனக் கூறியிருக்கிறார்..
