‘ஜெயிலர் 2’ செட்டில் ரஜினியும் எஸ்.ஜே.சூர்யாவும்! சீக்ரெட்டை பகிர்ந்த சிவராஜ்குமார்
கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி முதன் முறையாக இணைந்த திரைப்படம் ஜெயிலர். அந்தப் படத்தின் மீது அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதற்கு காரணம் ஜெயிலர் படத்திற்கு முன்பு நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கியதுதான். ஏனெனில் பீஸ்ட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஒரு மீம்ஸ் மெட்டீரியலாக மாறியதுதான் அதற்குக் காரணம்.
ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளானார் நெல்சன். அப்படி இருக்கும் பொழுது ரஜினி எப்படி நெல்சனை தேர்ந்தெடுத்தார் என்பது ரஜினி ரசிகர்களின் கவலைக்கு காரணமாக அமைந்தது. இருந்தாலும் நெல்சன் மீது ஒரு பெரிய நம்பிக்கையை வைத்து ரஜினி அந்த படத்தில் நடித்தார். யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை அந்த படம் பெற்றுக் கொடுத்தது.
அதேசமயம் வசூலிலும் பெரிய சாதனையை படைத்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. ஜெயிலர் படத்தில் நடித்த அதே நடிகர்கள்தான் இந்த படத்திலும் நடிக்கின்றனர். கூடுதலாக எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தைப் பற்றி சிவராஜ் குமார் சமீபத்திய ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதாவது எனக்கும் ரஜினி சாருக்கும் இடையில் இருக்கும் அந்த நெருக்கம் நட்பு மிக ஆழமானது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எஸ் ஜே சூர்யா அடிக்கடி ஜோக் அடித்துக் கொண்டே இருப்பார். எஸ் ஜே சூர்யாவும் ரஜினி சாரும் ஒரு உறவுக்காரர்களைப் போல செட்டில் பேசிக் கொண்டிருப்பார்கள். ரஜினி சாரைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு பெரிய சாதனையை படைத்தவர் என்றாலும் தலக்கணமில்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார்.
எப்பொழுதெல்லாம் ரஜினி சார் பெங்களூரு வருகிறாரோ அப்போது எங்கள் வீட்டிற்கு வந்து எங்களை சந்திப்பார். என்னுடைய அப்பாவின் மீது அவருடைய மரியாதை அன்பு இதுதான் எங்களையும் அவருடன் இன்னும் நெருக்கமாக இருக்க வைத்தது என்று சிவராஜ் குமார் அந்த பேட்டியில் பேசியுள்ளார். ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பார் என அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் சிவராஜ் குமாரின் இந்த ஒரு பேட்டி அதை மேலும் உறுதிப்படுத்தியது.