தொடர்புடைய செய்திகள்
- அண்ணாமலையை தொடர்ந்து தனி இயக்கம் துவங்கிய லதா ரஜினிகாந்த்.. அரசியலுக்கு எண்ட்ரியா?..
- ரஜினியும் கமலும் அரசியல் பண்ண வந்தப்போ இத சொன்னீங்களா?!.. பிரகாஷ்ராஜுக்கு புளூசட்டமாறன் கேள்வி...
- விஜயை கண்டு அலறும் தலீவர்!.. கதறுங்க தலீவரே!.. புளூசட்டமாறன் நக்கல்...
- 25 கிலோ மீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்!. தோனியை புகழ்ந்த SK-வை பங்கம் பண்ணிய மாறன்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படம்.. ஹீரோ இவர் தான்.. இசை அனிருத்தும் இல்லை.. ஏஆர் ரஹ்மானும் இல்லை..!
விஜய் ஜெயிச்சதால மக்கள் மீது திடீர் பாசமா?!.. லதா ரஜினிகாந்தை விளாசிய புளூசட்ட மாறன்!..
ஏற்கனவே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒரு புதிய அரசியல் இயக்கத்தை துவங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினியின் மனைவி லதா மக்கள் மேடை என்கிற இயக்கத்தை துவங்கியிருக்கிறார். இது தொடர்பாக நேற்று லதா ரஜினிகாந்த் ஒரு வீடியோவைம் வெளியிட்டார்.
அதில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், நன்மைக்காகவும் மக்கள் அனைவரும் தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை பயன்படுத்தி சேவை செய்வதற்கான ஒரு சிறந்த தளமாக இந்த மக்கள் மேடை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சாமானிய மனிதர் முதல் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் யோசனைகளையும், மக்கள் சக்தியையும் ஒருங்கிணைப்பதே இதன் முதன்மை நோக்கம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் அந்தந்த தொகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கக்கூடிய புதிய உள்ள தலைவர்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம் என இருக்கிறோம் என பேசியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரபல சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் இதுவரை உங்கள் ராகவேந்திரா மண்டபத்தில் எத்தனை ஏழை மக்கள் இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் திருமணம் செய்துள்ளனர்? உங்க ஆஷ்ரம் பள்ளியில் ஏழை மாணவர்கள் அதிகமா அல்லது பணக்கார மாணவர்கள் அதிகமா? இப்போது விஜய் ஜெயித்ததும். மக்கள் மீது உங்களுக்கு திடீர் பாசம் ஏன்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சிலரோ, ரஜினி அரசியலுக்கு வரவில்லை. விஜய் இப்போது சி.எம். ஆகிவிட்டார். எனவே, மனைவி மூலம் ரஜினி இதை செய்கிறார் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால், இந்த இயக்கத்தை லதா ரஜினிகாந்த் கடந்த மார்ச் 7ம் தேதியே துவங்கிவிட்டார். அண்ணாமலையை பார்த்து இதை செய்யவில்லை என ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
